Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை தொடக்கம்! அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் குவிந்த மக்கள்

இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை தொடக்கம்! அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் குவிந்த மக்கள்

-

- Advertisement -

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று (செப்.18) தொடங்கியது. இதையொட்டி டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

we-r-hiring

அதிகாலையிலேயே நீண்ட வரிசை

புதிய ஐபோனை முதல் நாளிலேயே வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு அதிகாலை நேரத்திலேயே வந்தனர். டெல்லி சகேத் பகுதியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர், மும்பை மற்றும் பெங்களூரு ஸ்டோர்களிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சிலர் முந்தைய நாள் இரவே கடைகளுக்கு வந்து காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒருவர் அதிகாலை 5 மணிக்கே வந்ததாகவும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐபோன் வாங்குவதற்காக மக்கள் வந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஐபோன் 18 ப்ரோ விலை

இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ 256GB மாடலின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 512GB மாடல் ரூ.1,89,900-க்கும், 1TB மாடல் ரூ.2,39,900-க்கும், 2TB மாடல் ரூ.3,14,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256GB மாடல் ரூ.1,79,900-ல் தொடங்குகிறது. 512GB மாடல் ரூ.2,04,900-க்கும், 1TB மாடல் ரூ.2,54,900-க்கும், 2TB மாடல் ரூ.3,29,900-க்கும் கிடைக்கிறது.

புதிய நிறங்கள் மற்றும் அம்சங்கள்

ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 48MP Fusion Main கேமரா, variable aperture உள்ளிட்ட கேமரா அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், புதிய A20 Pro சிப் மற்றும் நீண்ட நேர செயல்திறனை மேம்படுத்தும் வகையிலான புதிய vapor chamber தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் ஃபோல்டபிள் ஐபோனும் விற்பனைக்கு வந்தது

இதனுடன் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் போனான iPhone Duoவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 256GB மாடலின் ஆரம்ப விலை ரூ.2,99,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், AirPods 5, Apple Watch Series 12 மற்றும் Apple Watch Ultra 4 உள்ளிட்ட புதிய சாதனங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஆப்பிள் ஸ்டோர்களில் குவிந்த ஐபோன் ரசிகர்கள்

புதிய ஐபோன்களின் விலை அதிகமாக இருந்தாலும், முதல் நாளிலேயே வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

மருந்துக் கடைகளில் இனி சிசிடிவி கட்டாயமா? மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனையை கண்காணிக்க மத்திய அரசு புதிய திட்டம்!

MUST READ