Homeசெய்திகள்இந்தியாசட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி கடும் தாக்கு

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி கடும் தாக்கு

-

- Advertisement -

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், தெலுங்கு தேசம் (TDP) கூட்டணி அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP) தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

பஞ்சலிங்கலா உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியின் ஆலூர் தொகுதி எம்.எல்.ஏ விரூபாக்ஷியை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி பேசிய முக்கிய அம்சங்கள்:

  • பொய் வழக்குகள் மற்றும் ரெட் புக் அரசியல்: “கூட்டணி ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்து பொய் வழக்குகள் போடுவது வழக்கமாகிவிட்டது. எங்கள் கட்சியின் ஆதரவு தளமாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட (BC) தலைவர்களையே தொடர்ந்து இலக்கு வைத்துப் பழிவாங்கி வருகின்றனர். ‘ரெட் புக்’ அரசியல் மூலம் எம்.எல்.ஏ விரூபாக்ஷி, அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளன.”

  • நள்ளிரவில் கைது நடவடிக்கை: “காவல்துறையினர் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து, அங்கிருந்த சிசிடிவி (CC TV) கேமராக்களை அடித்து நொறுக்கி, நள்ளிரவில் மக்கள் பிரதிநிதியை அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர்.”

  • தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகள்: “ஏற்கனவே எளிய சாலை விபத்து வழக்கை பெரிதாக்கி செரிடி அப்பாராஜு என்பவரைக் கைது செய்தனர். புகையிலை வியாபாரப் பிரச்சனையை கடத்தல் வழக்காக மாற்றி முஸ்தபாவை சிறையிலடைத்தனர். கூட்டத்தைக் கலைக்க உதவிய சிந்தடா ரவியையும் கைது செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட தலைவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே அரசின் ஒரே நோக்கம்.”

“காலம் மாறும்; ஆளுங்கட்சி வருந்தும்”

தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “அரசியல் எதிரிகளை ஒடுக்க பொய் வழக்குகள் போடும் இந்த கூட்டணி அரசின் ஆதிக்கம் நீடிக்காது. காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ‘ரெட் புக்’ அரசியலை முன்னெடுப்பவர்கள் வரும் நாட்களில் தங்கள் செயல்களுக்காகக் கண்டிப்பாக வருந்துவார்கள்” என்று எச்சரித்தார்.

மேலும், தான் சிறைக்குள் எம்.எல்.ஏ-வை சந்திக்கச் சென்றபோது, காவல்துறையினர் தனது புகைப்படத்தை முறையற்ற கோணங்களில் எடுத்ததாகக் கூறி காவல்துறையின் செயல்பாட்டிற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

1947 பிரிவினையின் போது மோடி பிரதமராக இருந்திருந்தால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது: யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு!

MUST READ