Homeசெய்திகள்இந்தியா​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலிமல் புகாரி...

​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலிமல் புகாரி பேட்டி

-

- Advertisement -

​இந்திய அரசியலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் முடியாது என்றும், ஒரு வலுவான மூன்றாவது அணியே தீர்வாக அமையும் என்றும் தி.மு.க. சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல் புகாரி தெரிவித்துள்ளார்.

​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலீம் அல் புகாரி பேட்டி

we-r-hiring

​அமித் ஷாவின் வருகையும் விமர்சனமும்
சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்காமல் இருந்ததும், கூட்டத்தொடரின் இறுதி நாளில் அவர் அவைக்கு வருவேன் என்று அறிவித்திருப்பதும் ஒரு ‘நாடகமே’ என்று அவர் விமர்சித்துள்ளார். “ராகுல் காந்தி போன்ற தகுதியற்ற தலைமையை வைத்துக் கொண்டு காங்கிரஸ் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது. அமித் ஷா அவைக்கு வருவதால் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப்போவதில்லை; இவை வெறும் கவனச்சிதறல் நடவடிக்கைகள் (Diversional Tactics) மட்டுமே” என்று அவர் குறிப்பிட்டார்.

​மணிப்பூர் மற்றும் மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம், பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அலிமல் புகாரி, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு செயல்பட்ட விதம் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். மாணவர்களின் போராட்டம் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதே தவிர, இதில் காங்கிரஸ் கட்சியின் தாக்கம் ஏதுமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலீம் அல் புகாரி பேட்டி

​மூன்றாவது அணியின் அவசியம்
இந்திய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு வலுவான மூன்றாவது அணி உருவாவது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.

​மாநிலக் கட்சிகளின் பங்கு: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய அரசியலில் ஒரு தெளிவான மாற்றத்திற்கான சூழல் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

​தி.மு.க.வின் தலைமை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கின்றன. எனவே, இதே போன்ற ஒரு வலுவான மற்றும் நிலையான மாற்றத்தை அகில இந்திய அளவில் கொண்டுவர தி.மு.க. தலைவர் முன்னெடுக்கலாம் என்றும், அது சாத்தியமானதே என்றும் அவர் தெரிவித்தார். ​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலீம் அல் புகாரி பேட்டி

​பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மோதல்
பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் முடிவுகளில் அவை வெளிப்படாமல் பார்த்துக்கொள்கின்றன. இருப்பினும், தனிநபர் துதி மற்றும் கட்சியின் போக்கினால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அதிருப்தி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ​இறுதியாக, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி நிலையான ஆட்சியை வழங்கி வருவதைப் போல, தேசிய அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த மூன்றாவது அணி அமைவதே பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கான ஒரே வழி என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

“இந்தியாவைத் தனது உத்தரவுக்குக் கீழ் அடக்குவதே பாஜகவின் அரசியல்; அதை உடைப்பதே எங்கள் பணி” – ராகுல் காந்தி கடும் தாக்கு!

MUST READ