spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅமைச்சர்களைத் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!

அமைச்சர்களைத் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!

-

- Advertisement -

 

அமைச்சர்களைத் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!
Karnataka INC

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழு தலைவராகவும், முதலமைச்சராகவும் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

we-r-hiring

இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ராஜபவனுக்கு சென்ற சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார், ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டைச் சந்தித்து, கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமைக் கோரினர். அதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைக்க வருமாறு சித்தராமையாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நாளை (மே 20) மதியம் 12.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கண்டீவரா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொள்கிறார். பின்னர், புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொள்கிறது. சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் 25 பேர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி!

இந்த நிலையில், அமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மன் சவடி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் தர அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல், சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் பொறுப்பை டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்களை அமைச்சர்களாக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோரும் அமைச்சர்களாக அதிக வாய்ப்புள்ளது.

அமைச்சரவைப் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ