spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே

அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே

-

- Advertisement -

அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மணிப்பூரில் 83 நாட்களாக நடந்துவரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி அரசிடம் இருந்து INDIA பதில் கேட்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் சூழல், வலுவற்ற தன்மை கொண்டதாக உள்ளது. மணிப்பூரில் நடக்கும் வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

பணிக்கு வராத ஊழியர்கள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!

முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை கொண்ட மாநிலங்களுக்கு இது நல்ல சூழல் கிடையாது. பிரதமர் மோடி னது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும். மணிப்பூரில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், அங்கு எப்போது அமைதி திரும்பும் என்பது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ