Homeசெய்திகள்இந்தியாபுதிய கண்டுபிடிப்பு, மூக்கு வழியாக கொரோனா மருந்து!

புதிய கண்டுபிடிப்பு, மூக்கு வழியாக கொரோனா மருந்து!

-

- Advertisement -

கொரோனா தடுப்பு மருந்தை மூக்கு வழியாக செலுத்தும் புதிய முறையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பை மத்திய அமைச்சர்கள் மன்சூக் மாண்டவியா, ஜித்தீந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், இது உலகின் முதல் கண்டு பிடிப்பென்று அறிமுகம் செய்தனர்.

we-r-hiring

கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்த ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கியுள்ளது.

பாரத் பயோ டெக் நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட தடுப்பு ஊசியை கோடிக்கணக்கான மக்கள் உலக அளவில் செலுத்திக்கொண்டனர். இந்த தடுப்பூசி டோஸ் 1, டோஸ் 2 மற்றும் பூஸ்டர் டோஸ் என போடப்பட்டது.

தற்போது, கண்டுபிடிக்கப்பட்ட உள்ள இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்துக்கு இன்கோவாக் என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்ததின் அடிப்படையில் அவசர நிலைக்கேற்ப, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த இன்கோவாக் தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

கடந்த டீசம்பர் மாதம் பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்த அனுமதி  வழங்கப்பட்டது. மதிய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜித்தீந்திர சிங் ஆகியோர் நேற்று குடியரசு தினத்தை ஒட்டி இன்கோவாக் சொட்டு மருந்தை டெல்லியில் அறிமுகப்படுத்தினர்.

இந்த மருந்தினை மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 325 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 800 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த புதிய மருந்து இணையதளத்தில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி கொண்ட 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பு மருந்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ