spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஒடிஷாவின் 2 முக்கிய திட்டங்களின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமனம்!

ஒடிஷாவின் 2 முக்கிய திட்டங்களின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமனம்!

-

- Advertisement -

 

ஒடிஷாவின் 2 முக்கிய திட்டங்களின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமனம்!
File Photo

ஒடிஷா முதலமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வுப் பெற்றதையடுத்து, அவரை இரண்டு முக்கிய திட்டங்களின் தலைவராக ஒடிஷா மாநில அரசு நியமித்துள்ளது.

we-r-hiring

அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவு

ஒடிஷா மாநிலத்தின் நிழல் முதலமைச்சர் என்று அழைக்கப்பட்ட வி.கார்த்திகேய பாண்டியன், கடந்த அக்டோபர் 20- ஆம் தேதி விருப்ப ஓய்விற்காக விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது விருப்ப ஓய்விற்கு நேற்று (அக்.23) மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, நவீன ஒடிஷா மாநிலத்தை உருவாக்குவது மற்றும் 5டி என்ற மாற்றங்களை உருவாக்குவது என இரண்டு திட்டங்களுக்கு வி.கே.பாண்டியனைத் தலைவராக நியமித்து, ஒடிஷா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!

மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கார்த்திகேய பாண்டியன், கடந்த 2002- ஆம் ஆண்டு ஒடிஷாவில் துணை ஆட்சியராகப் பதவியேற்று பின்னர் படிப்படியாக உயர்ந்து, கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

MUST READ