spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபசுவை கடத்திச்செல்வதாக சந்தேகத்தில் பிளஸ் 2 மாணவர் சுட்டுக்கொலை... ஹரியானாவில் பயங்கரம்

பசுவை கடத்திச்செல்வதாக சந்தேகத்தில் பிளஸ் 2 மாணவர் சுட்டுக்கொலை… ஹரியானாவில் பயங்கரம்

-

- Advertisement -

ஹரியானா மாநிலத்தில் பசுவை காரில் கடத்திச்செல்வதாக சந்தேகித்து 12 ஆம் வகுப்பு மாணவனை, பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஆர்யன், கடந்த 23ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மர்மநபர்கள் பசுவை கடத்துவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு வநத பசு பாதுகாப்பு கும்பல் ஆர்யன் சென்ற காரை நிறுத்த சொல்லியுள்ளனர். ஆனால் அச்சமடைந்த ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

we-r-hiring

இதனால் அவர்களை தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்திச்சென்ற அந்த கும்பல் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காரின் பின் இருக்கையில் இருந்த மாணவர் ஆரியன் கழுத்திலும் மார்பிலும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக பரிதாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பசு கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து  துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

MUST READ