Homeசெய்திகள்இந்தியாமீண்டும் கொரோனா - பிரதமர் மோடி ஆலோசனை

மீண்டும் கொரோனா – பிரதமர் மோடி ஆலோசனை

-

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் டெல்லியில் இன்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

modi

சீனாவில் கொரோனா தொற்று விரைவாக பரவி வருகிற நிலையில், அடுத்த 90 நாட்களில் 60 % சீன மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்,10 % மக்கள் உலக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், பல லட்சம் பேர் உயிரிழிக்க நேரிடும் என்று சீன தொற்று நோயியல் நிபுணர் எரிக் டிங் கூறியிருந்தார். இந்த நிலையில், சீனாவில் பரவிவரும் ஒமிக்ரான் பி.எப்.7 வகை கொரோனா வைரஸ் குஜராத், ஒடிசாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

we-r-hiring

புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் இன்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதனிடையே ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாகவும், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

MUST READ