Homeசெய்திகள்இந்தியாகணவர் மறுமணம் செய்ய வேண்டும் எனக் கடிதம்: புனேவில் தாய், மகன் உயிரிழந்த சோகம்!

கணவர் மறுமணம் செய்ய வேண்டும் எனக் கடிதம்: புனேவில் தாய், மகன் உயிரிழந்த சோகம்!

-

- Advertisement -

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், 33 வயது பெண் தனது 6 வயது மகனுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் வீட்டில் இருந்து பல பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

குடியிருப்புக் கட்டடத்தில் நடந்த துயரம்

புனேவின் டங்கே சௌக் அருகே உள்ள சிக்னேச்சர் பார்க் குடியிருப்பு வளாகத்தில் அக்டோபர் 30-ம் தேதி மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ஐக்தா பாங்கட் (33), தனது கணவர் மனோஜ் மற்றும் 6 வயது மகன் மாதவ் ஆகியோருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை சுமார் 6.30 மணியளவில், தனது மகனுடன் கட்டடத்தின் 18-வது மாடிக்குச் சென்ற ஐக்தா, அங்கிருந்து கீழே விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம்

போலீசார் நடத்திய சோதனையில், பெண்ணின் வீட்டில் இருந்து பல பக்கங்கள் கொண்ட கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், நீண்டகாலமாக முதுகுத்தண்டுவடம் தொடர்பான உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனது மறைவுக்குப் பிறகு கணவர் மறுமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மகனின் எதிர்காலம் குறித்த கவலைகளையும் அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

கட்டடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்துக்கு முன்பு பெண் தனது மகனுடன் மின்தூக்கி மூலம் 18-வது மாடிக்குச் சென்றதை உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தடயவியல் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடிதத்தின் உண்மைத்தன்மை, சம்பவத்துக்கான பின்னணி மற்றும் பிற சூழ்நிலைகள் குறித்து வாகட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலை நிராகரித்ததால் பள்ளி வகுப்பறையில் மாணவி மீது கொடூரத் தாக்குதல்! குற்றவாளியைப் பிடிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

MUST READ