Homeசெய்திகள்இந்தியாசில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் 3.54% ஆக குறைவு!

சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் 3.54% ஆக குறைவு!

-

நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் 3.54% ஆக குறைந்துள்ளது.

அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகளின்படி, 2024 ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.54% ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 4.10% ஆகவும், நகர்ப்புறங்களில் 2.98% ஆகவும் குறைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நகர்ப்புற பணவீக்கம் 7.20% ஆகவும், கிராமப்புற பணவீக்கம் 7.63% ஆகவும் இருந்தது.

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தை 4% ஆக குறைக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இலக்கை விட குறைந்துள்ளது. அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக்குறியீட்டு தரவுகளின்படி, ஜூலை மாதத்தின் உணவுப் பொருள்களுக்கான சில்லறை பணவீக்கம் 5.42% ஆக உள்ளது. இது கிராமப்புறங்களில் 5.89% ஆகவும், நகர்ப்புறங்களில் 4.63% ஆகவும் உள்ளது.

 

 

 

 

 

MUST READ