கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ – SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல்நாளில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது நாள் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார்.


மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
எஸ்சிஓ அமைப்பின் வளர்ச்சி: கடந்த 25 ஆண்டுகளாக எஸ்சிஓ அமைப்பு வலுவடைந்து வருகிறது. இந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்களின் நன்மைக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் எஸ்சிஓ அமைப்பு புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும்.
தீவிரவாத ஒழிப்பு: மனித குலத்தின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க எஸ்சிஓ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாத தடுப்பில் இரட்டை வேடம் போடக்கூடாது.
அமைதிப் பேச்சுவார்த்தை: மேற்கு ஆசிய போரால் அந்த பிராந்தியம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது; அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை இந்தியா ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு: போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய குற்றம் ஆகும். போதைப்பொருட்களால் இளம் தலைமுறை சீரழிவதோடு, பல்வேறு நாடுகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. எனவே பாதுகாப்பு, குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் ஆகிய விவகாரங்களில் எஸ்சிஓ நாடுகள் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
போக்குவரத்து இணைப்பு (Connectivity): உலகத்தின் வளர்ச்சியில் போக்குவரத்து இணைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு உலக சந்தைகளை ஒருங்கிணைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. உறுப்பு நாடுகள் இடையே சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து மூலம் இணைப்புகளை ஏற்படுத்த எஸ்சிஓ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பாகிஸ்தான் மீது மறைமுக விமர்சனம்
பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வரும் சூழலிலும், அவற்றில் பெரும்பாலான அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் பின்னணியிலும், “தீவிரவாத தடுப்பில் இரட்டை வேடம் கூடாது” என்று எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பேசியதன் மூலம் பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
