காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நல குறைபாடு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி குறைபாடு காரணமாக ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் இதேபோல் நுரையீரல் தொற்று காரணமாக உடல்நல குறைபாடு ஏற்பட்டு டெல்லியில் உள்ள கங்காரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் வீடு திரும்பியிருந்தார்.
பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின்படி தொடர் ஓய்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் கூறும் தகவலின் படி சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் விரைவில் சோனியா காந்தி வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

