கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர் சித்திக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் மலையாள திரைப்பட உலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் சித்திக் உள்ளிட்டோர் பாலியல் புகார் எழுந்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் தெரிவித்துள்ள புகாரில் தனக்கு 21 வயதில் திரைப்படம் குறித்து ஆலோசிப்பதாக ஓட்டல் அறைக்கு அழைத்து சித்திக் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதேபோல் கேரள திரைப்பட அகாடமி தலைவரும், பிரபல இயக்குநருமானந ரஞ்சித் மீது, மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான பாலேரி மாணிக்கம் படத்தில்
நடிக்க தன்னை ரஞ்சித் அழைத்ததாகவும், அப்போது ஓட்டல் அறையில்
வைத்து, அவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார்களை தொடர்ந்து சித்திக், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுததினர. இதனை தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சித்திக் ராஜினாமா செய்தார். இதேபோல், கேரள திரைப்பட அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித் விலகியுள்ளார்.