Homeசெய்திகள்இந்தியாதாயகம் திரும்பிய வினேஷ் போகத்... டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தாயகம் திரும்பிய வினேஷ் போகத்… டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

-

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்த வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை காரணமாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அனைத்து வகையிலும் அவர்தான் உண்மையான சாம்பியன் என வினேஷ் போகத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

vinesh

இந்த நிலையில் வினேஷ் போகத், இன்று பாரீசில் இருந்து விமானம் முலம் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் அவரை நேரில் வரவேற்றனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வினேஷுக்கு வழீநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை கண்டு கண் களங்கிய வினேஷ், ரசிகர்களுக்கு கண்ணிர் மல்க நன்றியை தெரிவித்தார்.

vinesh

தொடர்ந்து, வினேஷ் போகத் தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பலாலி சென்றடைந்தார். அங்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

MUST READ