Homeசெய்திகள்இந்தியாவந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காதது ஏன்?-ஒன்றிய அரசு பதில்

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காதது ஏன்?-ஒன்றிய அரசு பதில்

-

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காததன் காரணம் என்ன?-ஒன்றிய அரசு பதில்

வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேட்ட கேள்விக்கு, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

வைகோ

அதில், 2023 ஜூலை மாதத்தில், 22549/22550 கோரக்பூர் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 12461/12462 ஜோத்பூர் சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 25 ஜோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இந்திய இரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இந்திய இரயில்வேயில் செயல்பாட்டு சாத்தியக்கூறுகள், போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் இரயில் பெட்டிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கு உட்பட்டது.

இந்திய இரயில்வே, மாநிலம்/பிராந்திய வாரியாக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை, ஏனெனில் ரயில்வே நெட்வொர்க் மாநிலம்/பிராந்திய எல்லைகளை கடந்து செல்கிறது. இருப்பினும், 20643/20644 எம்ஜிஆர் சென்னை கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 20607/20608 சென்னை – மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள நகரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 20833/20834 விசாகப்பட்டினம்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், 20701/20702 செகந்திராபாத்-திருப்பதி எக்ஸ்பிரஸ், 20633/20634 காசர்கோடு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் 20661/20662 கே.எஸ்.ஆர் பெங்களூரு-தார்வார் எக்ஸ்பிரஸ் போன்றவை என நாட்டின் தெற்குப் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது” என விளக்கம் அளித்துள்ளார்.

 

MUST READ