Homeசெய்திகள்இந்தியன் 3-ம் பாகம்... ஷங்கர் கொடுத்த புதிய அப்பேட்... இந்தியன் 3-ம் பாகம்… ஷங்கர் கொடுத்த புதிய அப்பேட்…
- Advertisement -
இந்தியன் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால் இல்லை என்றும், அவரது காட்சிகள் இந்தியன் 3-ம் பாகத்தில் தான் இடம்பெறும் என்றும் படத்தின் இயக்குநர் ஷங்கர் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமலை வைத்து மீண்டும் இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர்,உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றன

இந்நிலையில் சென்னை நேரு அரங்கில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்தியன் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால் இடம்பெறும் காட்சிகள் இடம்பெறவில்லை என்றும், இந்தியன் மூன்றாம் பாகத்தில் தான் காஜல் அகர்வாலின் காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் இந்தியன் மூன்றாம் பாகமும் வெளியாக இருப்பதாகவும், அதற்கான படப்பிடிப்புகளும் நடைபெற்று இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.