Homeசெய்திகள்சட்டம்கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் முழுமையாக வெளியிடாத அறநிலையத்துறை – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் முழுமையாக வெளியிடாத அறநிலையத்துறை – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் முழுமையாகப் பதிவேற்றம் செய்யாத இந்து சமய அறநிலையத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் முழுமையாக வெளியிடாத அறநிலையத்துறை – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

தமிழகத்தில் உள்ள கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை முழுமையாக இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களிலும் முக்கியமான தகவல்கள் இடம்பெறவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை முழுமையாக இணையத்தில் வெளியிடாத அறநிலையத்துறையின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் உயிரிழப்பு – சங்கரின் உடன்பிறப்புகளுக்கு ரூ.25.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

MUST READ