அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்!


இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல், மொபைல் பயன்பாட்டாளரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய நிறுவனங்கள், தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களைச் சராசரியாக 12 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்டண உயர்வுக்கு என்ன காரணம்?
வருவாயை உயர்த்த திட்டம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் பயனரிடமிருந்து பெறும் சராசரி வருவாயை (ARPU – Average Revenue Per User) உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. நாடு முழுவதும் 5G நெட்வொர்க் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான செலவினங்களை ஈடுகட்டக் கட்டண உயர்வு அவசியமாகிறது என நிறுவனங்கள் தரப்பில் கருதப்படுகிறது.
எப்போது அமலுக்கு வரும்?
தொலைத்தொடர்பு துறை வல்லுநர்களின் கணிப்பின்படி, இந்தச் புதிய கட்டண உயர்வு அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) பயனர்களின் மாதாந்திர ரீசார்ஜ் செலவு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 12% வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பது சாமானிய மக்களின் மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
