Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா - விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

-

- Advertisement -

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம் என்ற ரீதியில் இந்த தேர்தல் களம் மாறியிருந்ததை பார்க்க முடிந்தது.2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா - விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு? தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிவடைந்துள்ள நிலையில், மே 4-ம் தேதி வெளியாகப்போகும் முடிவுகள் தான்  “வெற்றி” யாருக்கு என்பதை உறுதிப்படுத்தும்.

​இருப்பினும், இந்த பிரச்சாரக் களத்தில் நாம் கவனித்த சில முக்கிய அம்சங்களை சொல்ல வேண்டும்.

we-r-hiring

​மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகால அரசியல் முதிர்ச்சி கொண்டவா். அவா் 1970-களில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, அடிமட்டத் தொண்டர் முதல் சட்டமன்ற உறுப்பினா், மேயர், உள்ளாட்சி துறை அமைச்சா், முதலமைச்சா் வரை அவருக்கு இருந்த அனுபவத்தை வைத்து ஆட்சி நடத்தினாா். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை படிக்க வைக்க பல திட்டங்களை முன்னெடுத்தார். பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் கவனத்தை செலுத்தினார்.

​தனது ஆட்சிக்கு “திராவிட மாடல்” என்று பெயரிட்டு இந்தியாவிற்கே முன்மாதிாியான ஆட்சி நிா்வாகத்தை கொடுத்தாா். மாநில உரிமைகளை பாதுகாத்தாா். கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் மகளிா் உாிமைத் தொகை, மகளிா் இலவச பேருந்து, நாம் முதல்வன் திட்டம் என்று பல சாதனைகளை முன்வைத்து ஒரு ஆளுமை மிக்க தலைவராகப் பிரச்சாரம் செய்தார்.

​அரசியல் என்பது ஒரு நீண்ட காலப் பயணம் என்பதை தனது அனுபவத்தின் மூலம் நிரூபிக்க ஒரு உண்மையான தலைவனாக களத்தில் இருந்தார்.

நடிகர் ​விஜய் 30 ஆண்டுகால சினிமாவில் தான் கற்றதையும், சம்பாதித்ததையும் மூலதனமாக வைத்து அரசியல் களத்தில் இறங்கினாா். சினிமா மூலம் பெற்ற ரசிகர்களின் செல்வாக்கையும், கவர்ச்சியையும் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அடித்தளமாக மாற்றினார். ​திரையில் தோன்றிய ஹீரோ “நிஜத்திலும் தான் ஒரு ஹீரோவாக வேண்டும்” என்கிற எண்ணத்தில் கடுமையாக முயற்சி செய்தார்.

நிஜத்தில் அரசியல் ஹீரோ என்பது மாநில உரிமைக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே குரல் கொடுத்து அதை தடுப்பது. உதாரணமாக தொகுதி மறுசீரமைப்பு மசோதா வரும்போது அதை நிஜத்தில் ஹீரோவாக இருக்கும் ஸ்டாலின் கருப்பு சட்டையுடன் போராடினார். அந்த ஆபத்தை 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் மூலம் தடுத்து நிறுத்தினாா்.2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா - விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு? ஆனால் விஜய், சினிமாவில் தான் காட்டிய அதே வீரத்தை, உணர்ச்சிகரமான உரையாடல்களை நிஜத்தில் காட்ட தவறிவிட்டாா். அதற்கு பதிலாக திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள புனித அந்தோணியாா்  கிறிஸ்த்துவ தேவாலயத்தில் முட்டிப் போட்டுக் கொண்டே நகர்ந்தார். அந்த இடத்தில் மிகப் பிரமாதமாக நடித்தார். அவர் எந்த துறையில் 30 ஆண்டுகளாக பயிற்சி பெற்றாரோ அதை சிறப்பாக தோ்தலிலும் செய்து காட்டினாா். வழக்கம்போல் மக்கள் பிரமாதம் என்று கொண்டாடினார்கள்.

​தேர்தலில் 85%-க்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்திருப்பதற்கு விஜய்யின் அந்த நடிப்பும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் கற்ற வித்தைகளை அரசியலுக்குத் தேவையான ஈர்ப்பாக (Mass Appeal) மாற்றிக் காட்டினார்.

​அரசியல் அனுபவம் என்பது தழும்புகள் நிறைந்த ஒரு நீண்ட போராட்டம்; சினிமா என்பது ஒரு சில மணிநேரங்களில் தீர்வைத் தரும் வசீகரம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரையில் பார்த்த பிம்பங்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஒன்றும் புதிதல்ல (எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை).

​விஜய்யின் இந்த “புதிய முயற்சி” 50 ஆண்டுகால “அனுபவத்தை” முந்துமா அல்லது அனுபவம் மீண்டும் வெல்லுமா என்பது மே – 4 தேதி தெரிந்துவிடும்.

முதல்வரின் சொத்து மதிப்பை விட விஜய்யின் சொத்து பலமடங்கு அதிகம் – மிரள வைக்கும் தவெக கோடீஸ்வரர்கள்

 

MUST READ