spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அண்ணா நினைவு நாள் - திராவிட இயக்கம் நினைவுகள் – உதயநிதி ஸ்டாலின்

அண்ணா நினைவு நாள் – திராவிட இயக்கம் நினைவுகள் – உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.அண்ணா நினைவு நாள் - திராவிட இயக்கம் நினைவுகள் – உதயநிதி ஸ்டாலின்

மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் – தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை, எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர், உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்,

we-r-hiring

ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர், தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று.  அண்ணா நினைவு நாள் - திராவிட இயக்கம் நினைவுகள் – உதயநிதி ஸ்டாலின்மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம் என கூறியுள்ளாா்.

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

MUST READ