spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கூடுகிறது பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்! - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் வெளியிடுகிறது...

கூடுகிறது பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்! – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் வெளியிடுகிறது பாஜக தலைமை!

-

- Advertisement -

பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் பாஜக தலைமை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.கூடுகிறது பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்! - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் வெளியிடுகிறது பாஜக தலைமை!70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஜனவரி மாதம் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் டிசம்பர் 30ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய தொடங்கியுள்ளது.

டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி இதுவரை 5 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதன்படி இந்தவாரம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அக்கூட்டத்திற்கு பிறகு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி மாதம் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிடவுள்ளதாகவும் அதற்கான பணிகளையும் பாஜக மும்முரமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி

we-r-hiring

MUST READ