spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சண்முகம் விமர்சனம்

அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சண்முகம் விமர்சனம்

-

- Advertisement -

அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சன்முகம் விமர்சனம்அதிமுகவில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு” “அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான்”

மோடியா லேடியா என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக இயக்கம் இன்றைக்கு ‘அண்ணன் அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதன் படிதான் நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இந்த தில்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.

சிறந்த நடிகருக்கான விருது வென்ற சாந்தனு…. எந்த படத்திற்காக தெரியுமா?

we-r-hiring

MUST READ