ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதிகளும் 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று ஜெகன் மோகன் ரெட்டியை தோற்கடித்துள்ளார்.

ஆந்திராவில் அசூர பலம் பெற்றிருந்த YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த பாஜக, ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்தார். சந்திரபாபு நாயுடுவின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்து.
2019 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 175 இடங்களில் அபார வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும் 22 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அந்த கட்சி வென்றது. சட்டசபைக்கு 2019ல் வெறும் 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தெலுங்கு தேசம் தற்போது மாபெரும் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்கயுள்ளாா்.
தற்பொழுது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளது.
ஜெகன் மோகனின் ஒய் ஆர் எஸ் காங்கிரஸுக்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மாணவர் பருவத்தில் 1974ல் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். என்டி ராமாராவின் மறைவுக்குப் பின் அக்கட்சியின் தலைவர் ஆனார்.
தற்பொழுது ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் கடந்த மே 13-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இதில் ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் ,ஜனசேனை, மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே இருமுனைப் போட்டி கடுமையாக இருந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. பேரவை தேர்தலில் தெலுங்கு தேச கூட்டணிக்கு மொத்தமாக 163 இடங்கள் கிடைத்தன . அதே நேரம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 12 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வை சந்தித்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிட்ட புலிவெந்துலா தொகுதியில் ஜகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றார்.
ஒரு அமைச்சர் தவிர மற்ற அமைச்சர் அனைவரும் தோல்வி அடைந்தனர். மக்களவை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16 இடங்களிலும் பாரதிய ஜனதா 3 இடங்களிலும் ஜனசேனை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒய் எஸ். ஆர். காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.


