Homeசெய்திகள்அரசியல்உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை

உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை

-

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திருமாவளவன் கடிதம் அளித்து வலியுறுத்தி உள்ளார்.உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை

உத்தரபிரதேசத்தின் சம்பாலில்  ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இது பதினாறாம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக முஸ்லிம் தரப்பு கூறி வருகிறது. ஆனால் அது இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து மசூதிக்குள் ஆய்வு மேற்கொள்ள உத்தர பிரதேச சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாக தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு இன்று (29/11/2024) விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாட மசூதி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மசூதி நிர்வாகம் உயர்நீதி மன்றத்தை நாடினால் அந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். உயர் நீதிமன்றம் வழக்கை பட்டியலிடும் வரை விசாரணை நீதிமன்றம் மேற்கொண்டு எந்த முடிவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது முடித்து வைக்காமல் அடுத்த கட்ட விசாரணைக்காக நிலுவையில் வைத்துள்ளது.அமைச்சர் அமித்ஷாவை

உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரத்திலும் இதேபோன்று இந்து முஸ்லீம் தரப்பினரிடையே சர்ச்சை எழுந்துள்ளது.இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திருமாவளவன் கடிதம் அளித்து வலியுறுத்தி உள்ளார். வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜிதில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் போலிஸின் தவறான நடத்தைகள்  பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீட்டு விவரங்கள் – மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்

 

MUST READ