- Advertisement -
முதல்வர் ஸ்டாலின் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி எனக்கு கிடைக்கவில்லை பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
பாமக நிறுவனர் ராமதாஸ் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து விமானநிலையத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவரிடம் முதல்வர் ஸ்டாலின் ராமதாஸ்க்கு வேலையில்லை அவர் அறிக்கைக்கு எல்லாம் பதில் கூற முடியாது என தெரிவித்ததை பற்றி கேட்டதற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளது போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை எனக்கு வருத்தமாக இருக்கிறது நான் என்ன செய்வது என இவ்வாறு பதில் அளித்தார், தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.
மகாராஷ்டிராவில் பாஜக அமைச்சர்கள் யார் யார்? வெளியானது பட்டியல்