தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) இடையிலான கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடியுள்ளார்.
ஓபிஎஸ்–இன் குற்றச்சாட்டு
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் தற்போதைய நிலையை விமர்சித்தார். அவர் கூறியதாவது:

”எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்காகவும் கூட்டணிக்காகவும் நடிகர் விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார். பழனிசாமியும், டி.ஜெயக்குமாரும் (உதயகுமார்) சேர்ந்து அதிமுகவை குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.”
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அதிமுக தரப்பு அவரோடு இணைய விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதைத்தான் ஓபிஎஸ் கிண்டல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி பலவீனமடைந்துள்ளதாக ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஓபிஎஸ்-இன் இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு ஈபிஎஸ் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விஜய்யின் TVK கட்சி இதுவரை எந்தக் கட்சியுடனும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
