spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்

-

- Advertisement -

 

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
mk stalin thiruma

குமரியில் நடப்பது உத்தரப்பிரதேச ஜேசிபி ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

we-r-hiring

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அவ்வப்போது திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கூட்டணியில் இருந்தாலும் திமுகவுக்கு எதிராக மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்துகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனால் இந்த தர்ணா போராட்டம் திமுக பிரமுகருக்கு நீதி கேட்டு தான் நடக்கிறது. திமுக முன்னாள் கவுன்சிலர் சீதா முருகனுக்கு நீதி கேட்டு இந்த தர்ணா போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்று மாலை 5 மணிக்கு மேல் நாகர்கோவில் வடசேரியில் நடக்கிறது இந்த தர்ணா போராட்டம் .

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
thirumavalavan mk stalin

நாகர்கோவில் திமுக பிரமுகர் சீதா முருகன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ளார். நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மூன்று முறை திமுக சார்பில் கவுன்சிலர் பதவியும், வட்ட செயலாளர் பதவியும் வகித்து வந்தவர் சீதா முருகன். நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் வட்ட செயலாளர் பதவியை இழந்துவிட்டாலும் கட்சிக்காக தொடர்ந்து தனது பணிகளை செய்து வருகிறார்.

சொந்தமாக நாகர்கோவில் அசம்பு ரோடு பகுதியில் இவர் வாடகை கட்டிடத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். அண்மையில் ஒரு கும்பல் இந்த கடையை சூறையாடி இருக்கிறது. வாடகைக்கு கடை நடத்தி வந்த முருகன், கட்டிடத்தின் உரிமையாளருடன் போட்ட ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டின் இறுதி வரைக்கும் அங்கு கடை நடத்த முடியும். அப்படித்தான் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்.

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
vck kumari

இந்த நிலையில் திடீரென்று அந்த கடையின் கட்டிடத்தின் உரிமையாளர் அந்த கட்டிடத்தை வேறு ஒருவருக்கு விற்றிருக்கிறார் . அந்த கட்டிடத்தை புதிதாக வாங்கியவரோ சீதா முருகனிடம் முன்னறிவிப்பு எதுவும் செய்யாமலேயே கட்டிடத்தை இடித்து அகற்றி இருக்கிறார். இந்த திடீர் அட்டாக்கில் கடையில் இருந்த ஜவுளி அனைத்தும் சேதமாகி இருக்கிறது.

இதனால் வடசேரி காவல் நிலையத்தில் சீதா முருகன் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் மொத்தம் 39 போர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .ஆனால் இதுவரைக்கும் கைது நடவடிக்கை இல்லாமல் இருக்கிறது. புகார் கொடுத்ததற்காக சீதா முருகனுக்கு மிரட்டல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . சீதா முருகனின் நிலையை கண்டு இந்த பிரச்சனையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையில் எடுத்திருக்கிறார்கள். அவருக்கு நீதி கேட்டு தான் நாகர்கோவிலில் இன்று தர்ணா போராட்டத்தை நடத்துகிறார்கள் . இந்த போராட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் முழுவதும் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள் .

திமுக பிரமுகருக்காக திமுக அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்துவது நாகர்கோவில், குமரி பகுதியில் பெரும் பரபரப்பை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ