நாம் தமிழர் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவை ஆகிய இரண்டு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அருந்ததியர்கள் வந்தேரிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட சென்றனர்.
அப்போது போலீசாருக்கும் ஆதி தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசாரின் தடுப்பை மீறி ஆதிதமிழர் கட்சியினர் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட சென்றதால் அங்கே இரு கட்சியினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கற்கள், கட்டைகள் பாட்டில்கள், டியூப் லைட், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொண்டனர். இதில் இரு கட்சியினருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டது.
பின்னர் இச்சம்பவம் குறித்து இரு கட்சியை சேர்ந்த 35 பேர் மீது போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆதித்தமிழர் அருந்ததியினர் சேர்ந்த கோவிந்தராஜ்(39), ராமமூர்த்தி (35), முத்துசாமி(38), வேல்முருகன்(44) ஆகிய நான்கு பேரையும்
மேலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அல்லி முத்து(29), ராமச்சந்திரன் (52), சதீஷ்குமார்(38), வசந்தன்(38) என மொத்தம் எட்டு பேர் மீது காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலிசார் சிறையில் அடைத்தனர்.