ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக வரும் மே 13 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். காலை 10.48 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அவர் இரண்டாவது முறையாக புதுச்சேரி முதலமைச்சர் பொறுப்பை ஏற்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை ஆதரவை பெற்று ஆட்சியமைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி தெளிவான முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து, ஆளுநரிடம் ஆட்சியமைக்கும் உரிமையை கோரி கூட்டணி தரப்பு மனு அளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மே 13 ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரங்கசாமியின் பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி அரசியலில் மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி அமைய இருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…
