spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நடிகையை ஏமாற்றி சீமான் உறவு... 6,7 முறை கருக்கலைப்பு... உயர்நீதிமன்றம் அதிர்ச்சி

நடிகையை ஏமாற்றி சீமான் உறவு… 6,7 முறை கருக்கலைப்பு… உயர்நீதிமன்றம் அதிர்ச்சி

-

- Advertisement -

பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் சீமான் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தன் மீதான நடிகையின் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த மனுவின் தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது. மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப்பெற்றது தெளிவாகிறது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் ”சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்று உள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி கூறியுள்ளார். விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது. மிரட்டல் காரணமாக புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றது தெளிவாகிறது. மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை!

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. தை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை,குடும்பம் மற்றும் திரைத்துறை பிரச்னை காரணமாக சீமானை,விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார். சீமானின் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது” என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் சீமானின் குற்றத்தை உறுதி செய்துள்ளார்.

MUST READ