Homeசெய்திகள்அரசியல்நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

-

- Advertisement -

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு (EWS) எதிரான போராட்டத்தைக் கண்டு, ஒன்றிய பாஜக அரசை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரள்வதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைக்குக் காவல்துறை தடை விதித்துள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், “சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி” என்றும் சாடியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

we-r-hiring

பெரியார் திடலில் போலீஸ் குவிப்பும் ஸ்டாலின் எக்ஸ் (X) தளப் பதிவும்

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நீட் மற்றும் EWS இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருசக்கர வாகனப் பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக கடந்த ஜூலை 18-ஆம் தேதியே அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் காவல்துறை அதற்குத் தடை விதித்தது. அதுமட்டுமின்றி, பெரியார் திடலிலேயே போலீசார் குவிக்கப்பட்டு பரப்புரைப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பாஜக அரசை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது! தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலீசாரைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, ஆசிரியர் கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் தவெக அரசு வழங்கிட வேண்டும்” என்று அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் தலைவர்களின் கண்டனம்

திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைத் தடைக்குத் திமுக மட்டுமல்லாமல், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

காசா அமைதி ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘அமைதி வாரியம்’ திட்டத்தை ஏற்று ஆயுதங்களைக் கைவிட சம்மதித்தது ஹமாஸ் அமைப்பு!

MUST READ