spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழீழம் தான் ஒரே தீர்வு - வைகோ

தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ

-

- Advertisement -

தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.

மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி அளித்தார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் சார்பாக தமிழீழ 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நினைவேந்த நிகழ்ச்சியில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்க திருமுருக காந்தி, முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என நூற்றுக்கணக்கான பலத்தரப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நினைவேந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

we-r-hiring

தமிழீழம் தான் ஒரே தீர்வு - வைகோ

இதனைத் தொடர்ந்து புத்தர் கலை குழு சார்பாக பறை இசை நிகழ்ச்சியும் நடந்தன அதனை அடுத்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆகிய இருவரும் ஒன்றாக நினைவேந்தலை தீப்பந்தத்தால் ஏற்றினர் அதற்கு அடுத்ததாக நினைவேந்தலில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வீரமுழுக்கமிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியது.

லட்சக்கணக்கான தமிழர்களை சிங்கள கொலைகார கூட்டம், ராஜபக்சே கோட்டப்பையா கொலைகார கூட்டம் குண்டுகளை வீசியும், ஆகாயத்திலிருந்து குண்டு மழை பொழிந்தும், பட்டினி போட்டும் தமிழர்களை கொன்றார்கள். உலக வரலாற்றில் இப்படிப்பட்ட படுகொலை நடந்ததில்லை என்று சொல்ல கூடிய வகையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் 90 ஆயிரம் பேர் விதைவைகளாக இருக்கின்றனர் அவர்கள் நாதியற்றவர்கள் அல்ல, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் கடந்த வருடம் கனடா நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார்கள். அதனை அவர் 18 ஆம் தேதி பேசும்போது அதனை நினைவு படுத்தி பேசினார்.

தமிழீழம் தான் ஒரே தீர்வு - வைகோ

இதனால் சிங்கள அரசு கனடா தூதரை அழைத்து நீங்கள் எங்கள் நாட்டின் பிரச்சனையில் தலையீடுகள் என்று கண்டனம் தெரிவித்தார்கள், ஆனால் கனடா அதற்கு அசைந்து கூட கொடுக்கவில்லை.

கனடா என்று இதற்கு எவ்வாறு குரல் கொடுக்கிறதோ எவ்வாறு சுட்டிக்காட்டுகிறதோ அதுபோல எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த தமிழ் இனப்படுகொலை சுட்டிக்காட்டி இந்த படுகொலைக்கு காரணமான சிங்கள அரசுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும்.

அடைபட்டு கிடைக்கிற தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் இதனை உலகம் முழுவதும் நடத்த வேண்டும்.

இந்த தமிழர் கடற்கரையில் ஒளிச்சுடரை தூக்கிப் பிடித்துள்ளோம் , இந்த ஒளிச்சுடர் எப்படி எங்கள் மனதில் அணையாமல் இருக்கிறதோ அதுபோல ஆண்டுதோறும் வருவோம் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், சுதந்திர தமிழ் இனச்சுடர் ஓங்கி ஒளிகின்ற வரைஇந்த கடற்கரைக்கு வருவோம்.

மேதகு பிரபாகரன் படைகள் செய்தது போல யாரும் செய்தது கிடையாது, பிரபாகரன் புகழ் உலகம் இருக்கும் வரை இருக்கும். தமிழனுக்கு ஒரு முகவரியை எடுத்துக் காட்டியவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தான். தமிழீழம் மலரட்டும். மலர்க தமிழ் ஈழம்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,

தமிழீழம் தான் ஒரே தீர்வு - வைகோ

இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை தமிழக அரசே ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தொடர்ந்து இக்கோரிக்கையை மே 17 இயக்கம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்த அவர் தமிழக அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த தார் மேலும் ஈழத்தமிழர் நினைவாக தமிழகத்தில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்றும் திருமுருகன் காந்தி கூறினார்.

MUST READ