Homeசெய்திகள்அரசியல்2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி - சீமான் பேட்டி

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

-

- Advertisement -

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி வந்தவர்கள் என சீமான் பேட்டியளித்துள்ளாா்.2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி - சீமான் பேட்டிசென்னை  விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், “பிரச்சார களத்தில் நின்றவர் என்பதால் பாதுகாப்பு குறைபாடு பற்றி விஜய்க்கு தான் தெரியும். தேர்தல் ஆணையம் என்ன காரணம் சொல்கிறது என்று தெரியவில்லை. 5 பிரிவுகள் கீழ் வழக்கு என்றால் காரணம் சொல்லி இருக்க வேண்டும். நான் போலீசிடம் பாதுகாப்பு கேட்பது இல்லை. பாதுகாப்பில் என்ன குறைபாடு என்று விஜய் தான் சொல்ல வேண்டும்.

பா.ஜ.கவிற்கு மெயின் டீம்மே திமுக தான். தேர்தல் நேரத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் வாக்கை தக்க வைக்க எல்லாரையும் பி டீம் என்று சொல்லும். எங்கள் கட்சி உள்ளவர்கள் இந்துகள் தான் சொன்னது யார்? தமிழகத்தில் ஆழமாக வேர் ஊன்ற வைத்த கட்சி எது? எச்.ராஜாவை சட்டமன்றத்திற்கு அழைத்து சென்றது யார்? வாஜ்பாய் ஆட்சியை 5 ஆண்டுகள் நிலையாக இருக்க செய்தது திமுக தான். எல்லாரும் பா.ஜ.க பி டீம் என்றால் பா.ஜ.க.வின் ஏ டீம் திமுக.

we-r-hiring

தேர்தல் வாக்குறுதிகள் என்று சொல்ல கூடாது. இலவச அறிவிப்புகளை தந்து உள்ளனர். தரமான கல்வி, சரியான மருத்துவம், நல்ல குடிநீர் இலவசமாக தருகிறேன். சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து, கியாஸ் சிலிண்டர்களை உற்பத்தி செய்து தருகிறேன். இவை தான் வாக்குறுதி. மற்றவர்கள் சொன்னது வெற்று அறிவிப்புகள். கல்விக்கு ரூ.20 லட்சம் கடன் தருவது ஏன்? கல்வியை தர வேண்டியது அரசின் கடமை. கடன் தருவதற்கு வட்டி கடையா நடத்துகிறீர்கள். மாணவர்கள் கடன் தந்து படிக்க வைப்பதா. வேலை இல்லாதவர்களுக்கு ரூ4 ஆயிரம். வேலை தர முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றையும் எப்படி தருவீர்கள். தருவதாக கூறியதற்கு எப்படி எடுப்பீர்கள்.

நாட்டை தந்து விடுவீர்களா இழந்த மனத்தை தந்து விடுவீர்களா இழந்த உயிர்களை திருப்பி தருவீர்களா 6 லட்சம் பேரின் தாலியை அறுத்து விட்டு குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம். நாட்டையும் மக்களையும் ஏலம் விட்டு அடமானம் செய்து கடன். அறிவிப்புக்கு மேலும் ரூ.10 லட்சம் கடன் வாங்க வேண்டும். யாருக்கும் சம்பளம் இருக்காது. யாரும் கேட்க மாட்டார்கள். கடன் வைத்து செல்பவன் நல்ல தலைவனா?

ஆற்று மணல், மலையை வெட்டி வேறு மாநிலங்களுக்கு விற்பது ஏன்? மண்ணின் மக்களுக்கு மணல்களை தருகிறீர்களா? திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஏன் ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். கொள்கை எதிரி என்றால் கொள்கை என்ன சொல்லு. நாட்டு மக்களை குடிக்கார சமூகமாக மாற்றிய குற்ற சமூகமாக உள்ளது. 2 வயது குழந்தையை பாலியல் செய்து கொல்கிறான். மன நோயாளி போல் குடி நோயாளியாக ஆக்கிவிட்டனர். டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என விஜய் சொல்ல வேண்டும்.

மது கடையை திறந்து வைத்து விட்டு நாட்டில் சட்டம்-ஒழுங்கு, நேர்மை பற்றி பேசுவது பைத்தியக்கார தனம். பெண்களுக்கு பாதுகாப்பு பேசி பயன் இல்லை. நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி வந்தவர்கள் என்று சீமான் கூறினார்.

“இலவசங்கள் வேண்டாம்; வேலைவாய்ப்பும் தகுந்த ஊதியமுமே இலக்கு” – சீமான் அதிரடி முழக்கம்!

MUST READ