spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சீமான் தம்பிளுக்கு கண்ணி வைக்கும் தவெக... செல்லாக் காசுகளாக்கும் விஜய் கட்சி..!

சீமான் தம்பிளுக்கு கண்ணி வைக்கும் தவெக… செல்லாக் காசுகளாக்கும் விஜய் கட்சி..!

-

- Advertisement -

விஜய்யும் சீமானும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் பரவியபோது, “அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கம்தானே… அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக்கொள்கிறோம்” எனப் புன்னகையோடு சொல்லிவந்தார் சீமான். ஆனால் விஜய் மாநாடு நடத்திய இரண்டாவது நாளே அண்ணன் என்ன? தம்பி என்ன? என முறுக்கிக் கொண்டு விஜயை கடுமையா விமர்சித்து வருகிறார் சீமான். நாம் தமிழர் கட்சியில் இருந்து கொத்துக் கொத்தாக விலகி தவெகவில் தொண்டர்கள் சேர்ந்து வருவதால் சீமானுக்கு விஜய் பரம எதிரியாகவே மாறிப்போனார்.

we-r-hiring

நாம் தமிழர் கட்சியில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் விலக, காற்று பிடுங்கிய டயர் போல தொண்டர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானின் தம்பிகள் கூண்டோடு விலகினார்கள். அவர்கள் அனைவரும் திடீரென தவெக கட்சியில் ஐக்கியம் ஆனார்கள். இதற்காக கடந்த வாரம் அந்த ஏரியாவில் இணைப்பு விழாவும் நடந்தது.

இதில், 200 பேர் வரை இணைந்து, கட்சியோட துண்டு, அடையாள அட்டைகளை பெற்று தவெகவில் தஞ்சமடைந்தனர். சீமான் கட்சியில் இருந்தபோது வட்டம், மாவட்டம் என பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். ஆனல் இப்போது விஜய் கட்சியில் வெறும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.

MUST READ