Homeசெய்திகள்அரசியல்”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு...

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

-

- Advertisement -

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட செயல்பாடுகள் வேகமெடுத்து வரும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.

we-r-hiring

தமிழக அரசியலில் மாற்று அரசியலை முன்னெடுத்து வரும் நாம் தமிழர் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. “மக்களுக்கான அரசு” என்ற இலக்கோடு, விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த ‘ஆட்சி செயற்பாட்டு வரைவு’ உருவாக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சீமான், தற்போதைய அரசியல் சூழலில் இலவசங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்றும், தன்னிறைவு பெற்ற பொருளாதாரமே தீர்வு என்றும் வலியுறுத்தினார்.

விவசாயம் ஒரு அரசுப் பணி: விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், விவசாயிகளுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அங்கீகாரம் மற்றும் ஊதியம் வழங்கவும் சிறப்புத் திட்டம்.

கல்வி மற்றும் மருத்துவம்: மாநிலம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள்.

மது ஒழிப்பு: தமிழகத்தில் படிப்படியாக அல்லாமல், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளுக்கடைகளைத் திறந்து இயற்கைப் பானங்களை ஊக்குவித்தல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: காடுகளைப் பாதுகாத்தல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல் மற்றும் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்தல் ஆகியவற்றிற்குத் தனி அமைச்சகம் மற்றும் கடுமையான சட்டங்கள்.

அதிகாரப் பகிர்வு: 234 தொகுதிகளிலும் சமமான வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்குதல்.

தனித்துப் போட்டி – 50% இட ஒதுக்கீடு:
ஏற்கனவே அறிவித்தபடி, இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என 50% பெண்களுக்கு சரிநிகர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து சீமான் தெரிவித்ததாவது, “நாங்கள் தேர்தல் வியாபாரிகள் அல்ல, புரட்சி வீரர்கள். திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ் தேசியக் கொள்கையின் அடிப்படையில் ஒரு புதிய தேசத்தைப் படைப்போம்,” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளாா்.

MUST READ