Homeசெய்திகள்இந்தியாகேரளம் சட்டமன்றத் தேர்தல் -  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…

கேரளம் சட்டமன்றத் தேர்தல் –  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…

-

- Advertisement -

கேரளம் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதுவரை பாஜக சார்பில் 86 வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

கேரளம் சட்டமன்றத் தேர்தல் -  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…

140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளம் மாநிலத்திற்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில் 23-ம் தேதியோடு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி 47 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட  பட்டியலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று 39 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

அதில் மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக பணியாற்றிய குமணன் ராஜசேகரன் ஆரன்முலா சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் போட்டியிடும் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.ரஞ்சித் என்பவர் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை பாஜக தேசிய தலைமை வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்ற 47 வேட்பாளர்களில் 7 பேர் பெண் வேட்பாளராக இடம் பெற்றிருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 6 பேர் பெண் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி கேரளம் சட்டமன்றத் தேர்தலுக்கு வெளியிட்டுள்ள 86 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 13 பெண் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.apcnewstamil.com/news/india/divyang-shakti-scheme-launched-in-andhra-pradesh-free-travel-on-government-buses-for-the-differently-abled/197460

MUST READ