spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நான் எப்படி அமைச்சர் ஆனேன் தெரியுமா? அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

நான் எப்படி அமைச்சர் ஆனேன் தெரியுமா? அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

-

- Advertisement -

நான் எப்படி அமைச்சர் ஆனேன் தெரியுமா? அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Image

இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ என்ற ‘பாதயாத்திரை’யைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சோனியாவுக்கு ராகுலை பிரதமராக்க வேண்டும் என ஆசை, ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க ஆசை, லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வியை முதல்வராக்க ஆசை, மம்தா பானர்ஜிக்கு அவரின் மருமகனை முதல்வராக்க ஆசை, உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனை முதல்வராக்க ஆசை. இவர்களுக்கு நாட்டை பற்றியோ தமிழகத்தை பற்றியோ கவலையில்லை, தங்கள் குடும்பம் எல்லா வளங்களும் பெற வேண்டும் என்றே நினைக்கிறார்கள்” என்று சாடினார்.

we-r-hiring

உதயநிதி ஸ்டாலின்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், “நேற்று என்னைப் பற்றி எல்லாம் பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. என்னை முதலமைச்சராக்குவது தான் கழகத்தின் லட்சியம் என்று அமித்ஷா பேசியுள்ளார். நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ தலைவரானார்? உங்கள் மகன் எத்தனை மேட்ச் விளையாடி இருக்கிறார் எவ்வளவு ரன் அடித்திருக்கிறார்? 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்படும். திமுக கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க 100 பாசறை கூட்டம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

MUST READ