Homeசெய்திகள்அரசியல்"திமுகவை வச்சுக்கிட்டு வேற என்ன பேசுறது? - புலம்பலில் முடிந்த முதலமைச்சர் விஜயின் தேர்தல் பிரச்சார...

“திமுகவை வச்சுக்கிட்டு வேற என்ன பேசுறது? – புலம்பலில் முடிந்த முதலமைச்சர் விஜயின் தேர்தல் பிரச்சார நாடகம்!”

-

- Advertisement -

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியான திமுக மீது அள்ளிவீசிய குற்றச்சாட்டுகள் மற்றும் வெற்றுப் புலம்பல்கள் அரசியல் அரங்கில் பெரும் கேலியைக் கிளப்பியுள்ளன. எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுப் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், கடந்த காலப் பழைய டேப்களையே மாற்றி மாற்றி ஓட்டி, தனது வழக்கமான ‘திமுக எதிர்ப்பு’ என்ற ஒரே ஒரு பல்லவியைப் பாடித் தீர்த்துள்ளார்.

we-r-hiring

தனிப்பட்ட ராகமும், திசைதிருப்பும் நாடகமும்!

கிட்டத்தட்ட 30 நிமிடப் பிரச்சார உரையில் முப்பது முறைக்கும் மேல் ‘திமுக’ என்று கூறிக்கொண்டு, கொள்கை எதையுமே பேசாமல் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையே அவர் முன்னெடுத்துள்ளார். தனது தாயார் குறித்தும், போக்சோ வழக்குகள் குறித்தும் மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு, கடைசியில் அதையே ஹைலைட் செய்ய முயன்ற அவரது சில்லறை அரசியல் வியூகம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் திமுக மீது பழியைப் போடும் இந்தத் தந்திரம் மக்களிடம் எடுபடவில்லை.

அதிமுகவினர் இணைப்பு என்ற ஓட்டை உடைசல்களும், வெற்று மிரட்டல்களும்!

களத்தில் எடுபடாமல் தவிக்கும் நிலையில், முன்னாள் அதிமுகவினரைத் தூக்கிப் பிடித்து துணைப் பொதுப்பதவிகளைக் கொடுத்துத் தற்காலிகமாகச் சமாளிக்கப் பார்க்கும் தவெகவின் பசப்பு வேலைகள் யாருக்கும் தெரியவில்லை? அடிமட்டத் தொண்டர்களுக்கு என்ன சிக்னல் கொடுக்கிறோம் என்றுகூடத் தெரியாமல், அவசரக்கோலத்தில் அரங்கேற்றப்படும் இந்த நாடகங்கள் தேர்தல் களத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஹீரோயிசம் பேசும் வெற்று மரமட்டை அரசியல்!

ஆட்சியில் அமர்ந்துவிட்டாலும் இன்னும் எதிர்க்கட்சியைப் பார்த்துக் பயந்து நடுங்கும் பரிதாப நிலையில் தான் முதலமைச்சர் விஜய் உள்ளார். ரசிகர்கள் கை தட்டுகிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைக்கும் இந்தத் தனிமனித ஹீரோயிசப் போக்கு, இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஓடாது. மக்கள் தங்களின் உண்மையான குரல் எது என்பதைத் தகுந்த நேரத்தில் உணர்த்துவார்கள்!

திமுகவுக்கு சாதகம்… எடப்பாடிக்கு நாக் அவுட்! – மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் விஜய் செய்யும் அரசியல் தந்திரங்களும், உடைந்து போகும் அதிமுகவும்!

MUST READ