Homeசெய்திகள்சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்..... நாங்குநேரி சம்பவம் குறித்து நடிகர் சமுத்திரக்கனி!

சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்….. நாங்குநேரி சம்பவம் குறித்து நடிகர் சமுத்திரக்கனி!

-

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 17 வயது பள்ளி மாணவனை உடன்படிக்கும் மாணவர்கள் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வெறியால் சின்னத்துரை என்ற பள்ளி மாணவனை உடன் படிக்கும் 7 மாணவர்கள் சேர்ந்து வீட்டிற்கே சென்று அறிவாளால் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த அந்த மாணவனின் தங்கைக்கும் கையில் வெட்டுபட்டது. இருவரும் நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில், “சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ