Homeசெய்திகள்விளையாட்டு"2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்"- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!

“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!

-

 

"2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்"- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!
Photo: CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பென் ஸ்டோக்ஸ் அடுத்தாண்டு 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

கடப்பாறை, மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய ஆவடி மாநகராட்சி மேயர்!

இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் விளையாட இருப்பதால், அவர் ஐ.பி.எல். தொடரில் களமிறங்க மாட்டார் என சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், இந்தாண்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

ஆனால் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், முழங்கால் காயம் காரணமாக, மற்ற போட்டிகளில் விளையாடவில்லை. அடுத்தாண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக, இந்திய அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளதாலும், ஐ.பி.எல். தொடருக்கு பின் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் விளையாட இருப்பதாலும், பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதை தங்கள் நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று வெளியாகாது- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு!

கடந்த 2022- ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர்கள் பட்டியலில் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ