Homeசெய்திகள்விளையாட்டுமோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

-

- Advertisement -

 

மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான பீல்டிங் காரணமாக, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல…. வெளியானது டைட்டில்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வுச் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த மிட்செல் 11 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களிலும் வெளியேறினர். இருப்பினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கடந்தார். மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 66 ரன்களை விளாசினார். கடைசி பந்தில் மைதானம் வந்த தோனி, பவுண்டரி அடிக்க மைதானமே அதிர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி…

இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், ஸ்டாயினிஸ் சதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி ஓவரில் இலக்கை எட்டிய லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

MUST READ