Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல.... வெளியானது டைட்டில்...

அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல…. வெளியானது டைட்டில்…

-

அருண்விஜய் நடிக்கும் 36-வது படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைபப்டம் வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான், பார்டர், பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜய்யின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இதானி நடிக்க உள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். அன்பறிவு மாஸ்டர் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை கையாள்கிறார். பிடிஜீ நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி, படத்திற்கு ரெட்ட தல என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ