Homeசெய்திகள்விளையாட்டு17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது - கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் இன்று...

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது – கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

-

 

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன் தினம் முடிவடைந்தது. இதில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளாவன கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இந்த நிலையில் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள கொல்கத்தா அணி தற்போது 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஐதராபாத் அணி 2 முறை இறுதிப்போட்டிக்குள் முன்னேறி ஒரு முறை கோப்பையை கைப்பற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 17 முறையும் ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் கடந்த 3வது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

 

 

MUST READ