Homeசெய்திகள்விளையாட்டுமுழங்கால் வலி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் தோனி!

முழங்கால் வலி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் தோனி!

-

 

முழங்கால் வலி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் தோனி!
File Photo

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது முழங்கால் காயம் குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்துகளைக் கேட்கவுள்ளார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் நிர்வாகி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?

இடது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருக்கும் கேப்டன் தோனி, 16 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போதே, ஓடுவதற்கு சிரமப்பட்டார். இதனை தோனி வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். வலியைக் குறைப்பதற்காக, மருத்துவ சாதனம் ஒன்றை அணிந்து அவர் விளையாடினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மும்பை மருத்துவமனையின் எலும்பு மருத்துவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்ளும் முடிவை தோனி எடுப்பார் என்று தெரிகிறது.

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஐ.பி.எல்.லில் மேலும் ஒரு சீசன் ஆட விரும்புவதாகவும், அதற்கேற்ப தனது உடலை சீர்செய்ய முயற்சிகள் எடுப்பதாகவும் வெற்றிக் கோப்பையை வென்ற பின்னர், தோனி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ