இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூரியவன்ஷி, வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஜேக் ப்ரேசர்-மெக்குர்க்கின் சாதனை முறியடிப்பு
இதற்கு முன்பு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனை ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் வசம் இருந்தது. 2023-24 மார்ஷ் ஒருநாள் கோப்பைத் தொடரில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக டாஸ்மானியா அணிக்கு எதிராக அவர் 29 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அந்தச் சாதனையை வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக அதிரடி
தோஹாவில் நடைபெற்று வரும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு அபிஷேக் சர்மா 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி, 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் அரைசதத்தை 16 பந்துகளில் எட்டினார். தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய அவர், 9 ஓவர்கள் முடிவில் 135 ரன்களுடன் களத்தில் இருந்தார். அப்போது இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.
அபாரமான வீரர், சிறந்த வழிகாட்டி – ரிஷப் பந்தின் வரலாற்றுச் சதத்தைப் பாராட்டிய துருவ் ஜூரல்!
