Homeசெய்திகள்விளையாட்டுநியூசிலாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம்!

நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம்!

-

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இன்று காலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ரோவ்மன் பவல் தலைமையில் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 9 ரன்களிலும் ஜான்சன் ஜார்லஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 17 ரன்களிலும் ராஸ்டன் சேஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக செர்வேன் ரூதர்போடு 69 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் டிரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டெவோன் கான்வே 5 ரன்களிலுன் பின் ஆலன் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 10 ரன்களிலும் கேன் வில்லியம்சன் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 136 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது..பந்துவீச்சு தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டநாயகனாக செர்வேன் ரூதர்போடு தேர்வு செய்யப்பட்டார்.

 

 

MUST READ