Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் முன்னிலையில் ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதலமைச்சர் முன்னிலையில் ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

-

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.200 கோடி முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

eaton

500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வுகளில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தொழீல்வழீகாட்டி நிறுவன சிஇஒ விஷ்ணு, ஈட்டன் மற்றும் அஷ்யூரன் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்,

 

 

MUST READ