Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

-

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

raid

we-r-hiring

வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்ப்பு மற்றும் முறையாக வரி செலுத்தாமல் ஏமாற்றுவோர் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடைபெற்றுவருகிறது.

வரிஏய்ப்பு புகார் காரணமாக முக்கிய தொழிலதிபர்களில் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

MUST READ