Homeசெய்திகள்தமிழ்நாடு பூணூல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் - நெல்லை மாநகர காவல்துறை 

 பூணூல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – நெல்லை மாநகர காவல்துறை 

-

- Advertisement -

நெல்லையில் இளைஞரின் பூணூலை மர்மநபர்கள் அறுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மாநகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.

நெல்லை மாநகர் பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டிவிஎஸ் நகர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தான்
அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக அகிலேஷ் என்ற இளைஞர் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின் புகாரின் பேரில் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இதில், அகிலேஷ் கூறியது போன்ற எந்த நிகழ்வும் அந்த நேரத்தில் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளதாக நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் அந்த பகுதியில் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும், அவர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது.

MUST READ